தென்காசியில் அரசு வழக்கறிஞராக இருந்த முத்துக்குமாரசாமி என்பவர் பஜார் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திலேயே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதிக இரத்தப்போக்கு காரணமாக கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துக்குமாரசாமி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து தென்காசி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.