கர்நாடகாவில் மேகதாது அணை கட்டினால் காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மெத்தனமாக உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. I.N.D.I.A கூட்டணியில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இதுபற்றி பேச வேண்டும்" என கூறியுள்ளார்.