ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்குள் சென்ற அதிகாரிகளை குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. SIR பணிகளுக்காக மேற்கு வங்கத்தின் நயகிராம் பகுதிக்குச் செல்வதற்குப் பதிலாக, கிராமத்திற்குள் தவறுதலாக சென்றுள்ளனர். அவர்களைப் பார்த்த அப்பகுதியினர் குழந்தை கடத்தல் கும்பல் என தவறாக நினைத்துள்ளனர். மேலும், தாக்குதல் தொடர்பாக கிராமத்தினர் 72 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது