99.9% வெள்ளி கட்டிகளை தொடர்ந்து, தற்போது வெள்ளி துகள் மற்றும் தூள் உள்ளிட்ட பிற வடிவங்களில் வெள்ளி இறக்குமதி செய்வதற்கும் மத்திய அரசின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியதை தொடர்ந்து, இந்த கூடுதல் கட்டுப்பாட்டை அரசு விதித்துள்ளது. உள்நாட்டு சந்தையை முறைப்படுத்தவும், தேவையற்ற இறக்குமதியை கட்டுப்படுத்தவும் இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.