முகமில்லா சரக்கு மற்றும் விற்பனை வரி மதிப்பீடு, பதிவுத்துறை கணினிமயமாக்கல், சுரங்கக் கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் சுமார் ரூ.15,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என தமிழக அரசு எதிர்பார்ப்பதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதற்கான துறைவாரியான கணக்கு, செயல்படுத்தும் காலக்கெடு மற்றும் நடைமுறை திட்டங்களை அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.