மாநில அளவில் கலைத் திருவிழா, வினாடி வினா உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள், 5 நாட்கள் கல்விச் சுற்றுலாவாக மலேசியா செல்கின்றனர். முதற்கட்டமாக 40 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் 2 ஆசிரியர்கள் மற்றும் 2 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். விமானப் பயணத்திற்கு முன் மாணவர்கள் தங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளும் வீடியோவை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.