விழுப்புரம் மேல்மலையனூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர் இளங்கோவன் (50) வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். மனைவி பிரிந்து சென்றதால் தாயுடன் வசித்து வந்த இவர், ஆசிரியர் பணியுடன் பழைய இரும்பு வியாபாரம் மற்றும் வட்டி தொழிலையும் செய்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களாக அவரை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகம் ஏற்பட்டு, உறவினர்கள் வந்து பார்த்தபோது துர்நாற்றம் வீசியுள்ளது. போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றினர். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.