தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), சென்னை சார்பில், 'சொந்த YouTube சேனலை உருவாக்குவது எப்படி' என்ற தலைப்பில் 3 நாள் பயிற்சி திட்டம் மே 25 முதல் 27, 2026 வரை நடைபெறுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோர், குறைந்தபட்ச
கணினி அறிவு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு www.editn.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.