நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ், சொந்தமாக விவசாய நிலம் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்கள் நிலம் வாங்க தமிழக அரசு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. இத்திட்டத்திற்கு 18 முதல் 55 வயதுக்குட்பட்ட தகுதியுடைய பெண்கள் https://newscheme.tahdco.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.