கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தவெக ஐடி விங் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளது. அதில், “சிறைபிடிக்கப்பட்டுள்ள 22 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு, திமுக அரசு கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக மீனவர்களின் உயிருக்கும் உழைப்பிற்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது ஒன்றிய, மாநில அரசுகளின் தார்மீகக் கடமை” என குறிப்பிட்டுள்ளது.