புதுச்சேரி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,500 உதவித்தொகை.. ஆளுநர் ஒப்புதல்

4பார்த்தது
புதுச்சேரி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,500 உதவித்தொகை.. ஆளுநர் ஒப்புதல்
புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கு ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் 21 முதல் 55 வயதுக்குட்பட்ட 64,450 குடும்பத் தலைவிகள் பயனடைய உள்ளனர். உதவித்தொகை உயர்வுக்காக ரூ.16.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் குடும்ப நலனையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி