கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞரை கொன்ற, தாத்தா - பேரன் கைது

3968பார்த்தது
கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞரை கொன்ற, தாத்தா - பேரன் கைது
செங்கல்பட்டு மாவட்டம் தாமரைகேணி பகுதியைச் சேர்ந்த கொத்தனார் விஜய் (28) என்பவர் நேற்று முன்தினம் வெட்டுக் காயத்துடன் அதே பகுதியில் உள்ள புதரில் சடலமாக கிடந்தார். சூனாம்பேடு போலீசார் விசாரணை செய்ததில், விஜய்க்கு அதே பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததால், அந்த பெண்ணின் மகன் 17 வயது சிறுவன் தனது தாத்தா தேவராஜ் (68) உடன் சேர்ந்து விஜய்யை வெட்டி, வாயில் பூச்சி மருந்தை ஊற்றி கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து தாத்தா, பேரன் இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி