மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவேக் ருதியா என்பவர் தனது குடும்ப சொத்து ஆவணங்களை சரி பார்த்துள்ளார். அப்போது 109 ஆண்டுகளுக்கு முன் விவேக்கின் தாத்தா, முதலாம் உலகப் போருக்கான போர்க்கடனாக இங்கிலாந்துக்கு 35 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்த ஆவணம் சிக்கியது. தற்போது வட்டியுடன் கணக்குப் போட்டால் இந்தக் கடனின் மதிப்பு ரூ. 10 கோடிக்கும் மேல் இருக்கலாம் என்கின்றனர். இந்தப் பணத்தை இங்கிலாந்து அரசிடம் கேட்டுப் பெற முடியுமா? அதற்கான வழிமுறை என்ன என விவேக் கேட்டுவருகிறார்.