கடலூர் அருகே மது அருந்த பணம் தராத பாட்டியை கொன்றதாக பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். வீ.காட்டுபாளையத்தில் இரும்புப் பெட்டியில் இருந்து மூதாட்டி சின்னபொண்ணு சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. விசாரணையில், இரு தினங்களுக்கு முன்பு பேரன் ராஜப்பிரியன் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து, சொம்பால் தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்ததாகவும், பின்னர் உடலை இரும்புப் பெட்டியில் வைத்து பூட்டியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.