தமிழறிஞரும் பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மறைவுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இரங்கல் தெரிவித்துள்ளது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின் பெருமையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் சாலமன் பாப்பையா ஆற்றிய பங்களிப்புகளை நினைவுகூர்ந்த அந்த அமைப்பு, அவரது மறைவு தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பு என தெரிவித்துள்ளது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துள்ளது.