ஜோலார்பேட்டை பகுதியில் 100 நாள்
வேலை செய்து வரும் பெண்ணுக்கு ரூ.2.79 கோடி ஜி.எஸ்.டி. வரி செலுத்துமாறு நோட்டீஸ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், 100 நாள்
வேலை திட்டத்தில் கிடைக்கும் சம்பளப் பணத்தைக்கூட எடுக்க முடியாமல் அவர் தவித்து வருகிறார். அந்த பெண் பெயரில் ஆர்.எம். ட்ரேடர்ஸ் என்ற நிறுவனம் நடத்தப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.