ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 66வது போட்டியில் இன்று (மே 21) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது. கிட்டத்தட்ட பிளேஆப் வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ள
சிஎஸ்கே இன்று கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. இந்த போட்டி
சிஎஸ்கே அணிக்கு வாழ்வா சாவா போராட்டமாக பார்க்கப்படுகிறது. புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் குஜராத் 2வது இடத்திலும், 12 புள்ளிகளுடன்
சிஎஸ்கே 7வது இடத்திலும் உள்ளன.