ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்.20) நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி 15.5 ஓவர்களில் 100 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால், மும்பை அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.