சென்னை கிண்டி ரேஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்ட 118 ஏக்கர் நிலத்தின் குத்தகையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த இடத்தில் பசுமைவெளி பூங்கா மற்றும் மழைநீர் சேகரிப்பு குளங்கள் அமைக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2015 வெள்ள பாதிப்புகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இத்திட்டம் சுற்றுச்சூழல் சமநிலையையும், காற்று மாசு குறைப்பையும் உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளனர்.