கடந்த 2008ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், 38 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை குஜராத் உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தனர். 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையும் உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க குஜராத் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.