ஜிவி நடிக்கும் 'வெக்கை' பட போஸ்டர் வெளியீடு

15பார்த்தது
ஜிவி நடிக்கும் 'வெக்கை' பட போஸ்டர் வெளியீடு
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரடக்ஷன்ஸ் மற்றும் டிவைன் புரடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை அகிரன் மோசஸ் இயக்குகிறார். சென்னையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ‘வெக்கை’ என பெயரிட்டு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். இதில் மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி வில்லனாகவும், ஷிவானி ராஜசேகர் நாயகியாகவும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் அடுத்த சில மாதங்களில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி