இந்தியாவின் வனவிலங்கு மற்றும் காடுகள் பாதுகாப்புத் துறையின் முன்னோடியாகத் திகழ்ந்த ஹேமேந்திர சிங் பவார் (89) காலமானார். இவர், "Project Tiger" திட்டத்தின் இயக்குனராகவும், இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் முதல் இயக்குனராகவும் பணியாற்றியவர். வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக செய்த ஒப்பற்ற சேவையை பாராட்டி, மத்திய அரசு கடந்த 2013-ஆம் ஆண்டு இவருக்கு "பத்மபூஷன்" விருது வழங்கி கௌரவித்தது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.