2026-ம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்கு, இந்தியா-சவுதி அரேபியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. சவுதி அரேபியாவில் அரசுப் பயணம் மேற்கொண்டுள்ள சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, அந்நாட்டின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தவ்பிக் பின் பவ்சான் அல் ராபியாவை கடந்த நவ.7-ம் தேதி சந்தித்து இது குறித்து பேசியுள்ளார். இதன்மூலம், இந்தியாவில் இருந்து 1,75,025 பேர் பயணம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.