மேகாலயாவைச் சேர்ந்தவர் 25 வயதான ஆகாஷ் குமார் சௌத்ரி. இவர், அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி டிராபி பிளேட் பிரிவு ஆட்டத்தில், வெறும் 11 பந்துகளில் அரைசதம் அடித்து உலக சாதனையைப் படைத்துள்ளார். மேகாலயா அணி 576 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற நிலையில் இருந்தபோது 8வது வீரராகக் களமிறங்கிய ஆகாஷ், வந்த வேகத்திலேயே அதிரடி காட்டத் தொடங்கினார். அவர் தொடர்ச்சியாக 8 சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார். இதில், லீமர் டாப் என்ற பந்துவீச்சாளரின் ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.