இந்தியா-மொரிஷியஸ் இடையே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வரலாற்று சிறப்புமிக்க 5 ஆண்டுகால புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூ
லம் மொரிஷியஸ் நாட்டின் ஒட்டுமொத்த வாகன பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் இறக்குமதி தேவைகளை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் பூர்த்தி செய்யவுள்ளது. மேலும், போர்ட் லூயிஸில் 27.5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கப்பல் எரிபொருள் சேமிப்பு நிலைய கட்டுமான பணிக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அடிக்கல் நாட்டினார்.