SA 20 தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் ரீடைன் பட்டியலில் ஃபாப் டு பிளெசிஸ் பெயர் இடம்பெறாததால், அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. SA20 முதல் தொடரில் இருந்து அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஃபாப் டு பிளெசிஸ் பெயர் இல்லாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணியின் முக்கிய வீரராகவும், தலைவராகவும் இருந்த அவரின் எதிர்காலம் குறித்து
கிரிக்கெட் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.