காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் மன்சூர் அலிகான், பிரதமர் மோடியை விமர்சித்துப் பேசியுள்ளார். காங்கிரஸை தவிர தியாகம் செய்யக்கூடிய கட்சி இல்லை. நான் அவங்களுடன் சேர்ந்திருக்கேன். எல்லோரும் சேருவார்கள். எங்களுக்கு திமுக அரசு நிச்சயமாக ஒத்துழைக்கும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாளாக மாற்றப்படும். நேரு 12 வருடம் ஜெயிலில் இருந்துள்ளார். மோடி ஜெயிலுக்கு சென்றுள்ளாரா?. அவர் டீ கூட ஆத்தியது இல்லை” என்றார்.