நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் புரோமோ பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என கூறப்பட்ட நிலையில், கதை காரணமாக அவர் விலகினார். தற்போது இயக்குநர் நெல்சன் இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகவும், புரோமோ படப்பிடிப்புக்காக செட் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.