கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இன்று அரசுப்பணிக்கான ஆணையை முதலமைச்சர்
விஜய் வழங்கவுள்ள நிலையில் அதனை எதிர்த்த வழக்குகளில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அப்போது, “கும்பகோணம் மகாமகம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு அரசுப்பணி வழங்கவில்லை” என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ‘கருணை அடிப்படையில் பணிக்கான விதிகளை பின்பற்ற வேண்டும் அல்லது புதிய விதிகளை உருவாக்க வேண்டும்’ என மனுதாரர் தெரிவித்துள்ளார்.