பொடியாக நறுக்கிய முட்டைகோஸுடன் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் முட்டையைச் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ள வேண்டும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து தோசைக்கல்லில் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாகச் சிவக்க எடுத்தால் சுவையான முட்டைகோஸ் ஆம்லெட் தயார். காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இது ஒரு சத்தான மற்றும் ருசியான மாற்றாக அமையும்.