'நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்.. 34,621 பேர் பயன்

17பார்த்தது
'நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்.. 34,621 பேர் பயன்
சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பெரம்பூர் எவர்வின் வித்யாஷ்ரம் சீனியர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் "நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம் நாளை மறுநாள் (14.02.2026) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மண்டலத்திற்கு ஒரு மருத்துவ முகாம் வீதம் மொத்தம் 15 "நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, இதுவரை 34,621 நபர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.