ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வாழ்த்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “புனித ரமலான் மாத நோன்பு தொடங்கியுள்ள இந்த புனித நாட்களில், இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். உங்கள் இல்லங்களில் அமைதி, நலன் மற்றும் வளம் பெருகட்டும்; ஈகை, பரிவு, சகோதரத்துவம் ஆகிய உயர்ந்த மனிதநேயப் பண்புகள் நம் சமூகத்தில் மேலும் வேரூன்றி வளர இந்த ரமலான் மாதம் வழிவகுக்கட்டும்” என்றார்.