இந்தியாவில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் வெப்ப அலை மேலும் தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடமேற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், பொது மக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.