தமிழகத்தில் இன்று மதுரையில் சதம் அடித்த வெயில்

2795பார்த்தது
தமிழகத்தில் இன்று மதுரையில் சதம் அடித்த வெயில்
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும், பல இடங்களில் பகல் நேரங்களில் அனல் காற்றுடன் கூடிய வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையியல், தமிழகத்தில் இன்று மதுரை விமான நிலையப் பகுதியில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் (100.4 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் பதிவாகி வெயில் சதம் அடித்துள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 100 டிகிரி பாரன்ஹீட்டைக் கடந்து வெப்பம் பதிவாகியுள்ளதால், அப்பகுதி மக்கள் பகல் நேரங்களில் வெளியே நடமாட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி