சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வரும் நிலையில், நாளை (பிப்.12) வேலூர், நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வரும் 17-ம் தேதி வரை பனிப்பொழிவு நீடிக்கும் என்பதால், அதிகாலை நேரங்களில் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.