கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் (நவ., 25, 26) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலையிலும் தொடர் கனமழை இருப்பின், அந்தந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பினை ஆட்சியர்கள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.