வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தின் 10 தென் மாவட்டங்களில் இன்று (பிப்.21) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என அவர் கணித்துள்ளார். வறண்ட வானிலைக்கு இடையில் பெய்யும் இந்த மழையினால் வெப்பம் தணிய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.