தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக நாளை (நவ.24) நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குமரி, விருதுநகர், தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.