வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று (ஜன.10) பிற்பக 1 மணிவரை 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.