தமிழ்நாட்டின் விருதுநகர், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் திடீரென கனமழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில், நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.