தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

6412பார்த்தது
தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
தமிழகத்தில் கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை (மே 15) ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக இந்த மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் மலைப்பகுதிக்குச் செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி