தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நவ.18) மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, மற்றும் தேனி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.