தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை வெளுத்துவாங்கி வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.2) விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மழை நீடித்தால், நாளையும் (டிச.3) அம்மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.