கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் தொலைபேசி எண் 0462-2501070, வணக்கம் நெல்லை 9786566111 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.