கனமழை எச்சரிக்கை.. பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் இன்று (டிச.03) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் திருவிழா காரணமாக திருவண்ணாமலை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
