வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வரும் 21-ஆம் தேதி தேனி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வானிலை மாற்றங்களைக் கவனித்து பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.