தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், வருகிற நவ.17ஆம் தேதி 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.