இலங்கை அருகே வங்க கடலில் உருவான 'டிட்வா' புயல், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, இன்று (டிச.3) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.