தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை

2543பார்த்தது
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியால், தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று (மே 24) இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி