கனமழையால் கடும் பாதிப்பு: 150 ஏக்கர் விளைநிலங்களை சூழ்ந்த வெள்ளம்

2202பார்த்தது
கனமழையால் கடும் பாதிப்பு: 150 ஏக்கர் விளைநிலங்களை சூழ்ந்த வெள்ளம்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பெய்த கனமழையால், 150 ஏக்கர் விளைநிலங்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளநீர் புகுந்து அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் கடும் சேதமடைந்துள்ளன. வடிகால் ஓடைகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் அடைப்புகளே நீர் தேங்கக் காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ள தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, வடிகால் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி